ராமநாதபுரத்தில் சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மலையரசு,செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் டாக்டர் கிருபாகரன்,இந்தியன் மருத்துவர் சங்கம் மாவட்ட தலைவர் அரவிந்த் ராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாகடர்சின்னத்துரை அப்துல்லா, டாக்டர் கலீல்ரகுமான்,மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள்,மாணவர்கள் முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.