By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

Last updated: July 23, 2026 5:43 pm
July 23, 2026
4 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 23 –

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC) அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூ.5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. பின்னர், புகார்தாரரின் வேண்டுகோளின் பேரில் ரூ.4,000 ஆக குறைத்து கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்க விருப்பமில்லாத ஈஸ்வரி, ஜூலை 20 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். புகாரை ஆய்வு செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு பொறிவைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டனர்.

அதன்படி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் தனிப்படை அதிகாரிகள் இணைந்து வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.4,000 லஞ்சத் தொகையை ஹேமலதா பெற்றுக்கொண்ட உடனேயே, அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சமாக பெறப்பட்ட பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மணப்பாறை வட்டம் வி.பெரியப்பட்டி வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஹேமலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரது இல்லத்திலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சம்பவம் வருவாய்த்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோரும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
விளாத்திகுளம் அருகே எஸ். அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்
பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் ‘கிரடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி

August 25, 2025
54 Views
இரமலான் விழாவுக்கான வாடிக்கையாளர்களுக்காக சென்னை நெக்ஸஸ் விஜயா மால் வரவேற்பு நிகழ்ச்சி
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account