தென் தாமரைகுளம்,.டிச.18.நெல்லை மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கும் கேப் பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணபிள்ளை மற்றும் இணை இயக்குனர் ஐயப்ப கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டலின் படி கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி இன்ஜினியர் ஜே .பி . ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ் ஆர் .நியூலின் ஆகியோரின் தலைமையில் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நடத்திய நானும் ரோட்டரியும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் ரோட்டரி கிளப் இணை கவர்னர் சசிதரன், ரோட்டரி கிளப் நாகர்கோவில் டவுண் பிரெசிண்ட் (2023-2024) செல்வ ராஜ் ,ரோட்டரி கிளப் நாகர்கோவில் எவர்கிரீன் பிரசிடெண்ட் தமிழ்செல்வி, ரோட்டரி கிளப் செக்ரட்டரி சுபா செந்தில் மற்றும் மகாகவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர். செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் ஜெர்லா,அயரின் ஷில்பா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



