By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது

Last updated: December 17, 2025 4:39 pm
December 17, 2025
52 Views
Share
SHARE

பூதப்பாண்டி, டிசம்பர் 17 –

நாகர்கோவில் அருகே விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது.  இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஆனால் அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் முதலமைச்சர் மற்றும் பிரதமர் வீடுகளிலும், குமரியில் பல இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து குமரி மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய நபர் எங்கிருந்து பேசினார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர் பூதப்பாண்டி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் நேற்றிரவு அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  

விசாரணையில் அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளார்‌. பின்னர் இசக்கி முத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் தான் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட வாலிபர் கடந்த 2023-ம் ஆண்டும் இதே போல் தொலைபேசியில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்

December 3, 2024
57 Views
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல்
இந்தியா முழுவதும் பைக் பயணம்: இளம் பெண்ணுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account