By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா

Last updated: August 26, 2025 11:24 am
August 26, 2025
47 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 26 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்துறைகளும் முதன்மைத் துறைகளாக விளங்கிடும் வகையில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.128.45 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் செஞ்சி பேரூராட்சி பகுதியில் 15.25 கோடி மதிப்பீட்டிலும் மரக்காணம் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.13.85 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை குத்துவிளக்கு ஏற்றி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மெக்கானிக் மோட்டார் வண்டி, சென்ட்ரல் ஏர் கண்டிஷன் பிளான்ட் மெக்கானிக், டெக்னிஷியன் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் ரிப்பேர், கம்ப்யூட்டர் எய்டெட் எம்பிராய்டரி மற்றும் டிசைனிங் போன்ற பாட பிரிவுகள் என 120 காலியிடங்கள் உள்ள நிலையில் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலே 120 மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா இருக்கும் நிலையில் மேலும் இரண்டு தொழிற்பேட்டைகள் வரவுள்ளது. எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் சேர்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் எனவும், தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ், செஞ்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரா. விஜய்குமார், வல்லம் ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா இரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம். மொக்தியார் அலி, ஒன்றிய குழு உறுப்பினர் எல்.பி. நெடுஞ்செழியன், அனந்தபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பரமேஸ்வரி, செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் சிவ நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரங்க ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதமிழ்நாடுதிருப்பூர்

கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை

December 16, 2025
97 Views
100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account