By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
கனஂனியாகுமரி

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

Last updated: August 6, 2025 11:38 am
August 6, 2025
50 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக 6 –

குமரி மாவட்டம் வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் நெடுஞ்சாலையில் மயிலாடியை அடுத்த புன்னார்குளம் பகுதியில் அமைந்துள்ளது கூண்டு பாலம். இதன் மேற்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் தரைப்பகுதியில் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் மிக முக்கிய பகுதி இந்த கூண்டு பாலம் ஆகும். இந்த சாலை வழியே தினமும் இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூண்டு பாலம் கடந்த வருடம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரைப்பகுதி ரூபாய் 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் அருகில் உள்ள கால்வாய்களில் இருந்து ஏராளமான தண்ணீர் சாலையில் புகுந்து பல இடங்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவுன்சிலர் பிரகாஷ் கூறியதாவது. குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான சாலைகளில் இந்த வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் சாலை ஒன்றாகும்.

இந்த சாலை வழியே ஆன்மீக தலங்களான உவரி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்கும் போது சரியான திட்டமிடல் இல்லாமலும் தொலைநோக்கு பார்வை இல்லாமல் அவசரக் கதியில் சீரமைத்துள்ளனர்.

இதனால் தற்போது அருகில் உள்ள கால்வாய்களிலிருந்து வெளியேறும் தண்ணீர் போதிய வடிகால்கள் இல்லாமலும் இருக்கின்ற வடிகால்கள் முறையாக பராமரிக்காமலும், பழுதடைந்தும் இருப்பதால் தண்ணீர் செல்வதற்கு வழியின்றி சாலையில் வந்து தேங்குகிறது. இதனால் அதில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்த ஆறு டாரஸ் லாரிகள் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

November 10, 2025
47 Views
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account