தருமபுரி, செப்.16: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் ஆர். அசோகன், டி.ஆர். அன்பழகன் ஆகியோர் தலைமையில், பெரியார் சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலையை அடைந்தனர்.
தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தலைமைக்கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



