By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்

Last updated: May 24, 2025 3:26 pm
May 24, 2025
100 Views
Share
SHARE

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (19.05.2025) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


தி.வ.மலை மே 20
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கி வருகிறார்.

அதன்படி இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறைசார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 802 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெறுவதோடு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 46 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 33 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் நவீன செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு 14 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.12,11,300/- மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜசேகரன், உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார், திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம் கலைசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்

September 9, 2024
96 Views
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account