தருமபுரியில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் வெல்லும், தமிழகம் போராடும் என்ற தலைப்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி வரவேற்புரை ஆற்றினார். நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தண்டபாணி, தென்னரசு, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ராஜன் மற்றும் செய்தி தொடர்பாளர் சபி சுலைமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, சுற்றுச்சூழல் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் சண்முகம், வைகுண்டம், மல்லமுத்து, செல்வராஜ், வீரமணி, பொன் மகேஸ்வரன் ,சேட்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



