கிருஷ்ணகிரி,ஏப்.7- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் காவேரிப்பட்டினத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவரவர் தங்களது முழு விவரத்தினை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர். 7.4.2005 முதல் 21.4.2025 வரை காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 ஊராட்சிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற இருப்பதால் அதற்கு ஏதுவாக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து அவரவர் தங்களது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் வல்லரசு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக செயலாளர் விஜய் வல்லரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் B.C.கணக்கன், காவேரிப்பட்டினம் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ரஞ்சித்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் கே.எஸ்.காளியப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.சி.குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி செயலாளர் அன்பு, முன்னாள் ராணுவ வீரர் சண்முகம், நரிமேடு மாது, முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீஷ், சசிகுமார், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



