திருப்புவனம்: பிப்:23
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்
கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன் ஆலோசனையின் பேரில் திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேற்கு
ஒன்றிய அவைத்தலைவர் பொன். இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன் மற்றும் சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலாளர் சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மணலூர்,
கீழடி, புலியூர், சங்கங்குளம்,மேலவெள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் பொற்கோ, மாவட்ட விவசாய அணி சேகர் , மாவட்ட நிர்வாகிகள் தொழிலாளரணி பூவந்தி மணிகண்டன், தேவதாஸ், சங்கர்,ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஈஷ்வரன், சக்திமுருகன் , ரவி, மீனவரணி அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.