நாகர்கோவில் மார்ச் 13
பாரளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய அமைச்சரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். . தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதே போல் ஆஷா பணியாளர்களுக்கு ஆதரவாக கேரள யுடிஎஃப்(UDF) எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரள யுடிஎஃப் (UDF) எம்.பி.க்கள் ஆஷா பணியாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரள யுடிஎஃப்(UDF) எம்.பி.க்கள், அவர்களின் கௌரவ ஊதியத்தை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதிய பலன்கள் ரூ.21,000 ஆக வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.