தக்கலை, டிச. 12 –
தக்கலை அருகே பறைக்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வின் ராபின்சன் மகன் கௌதம் ராபின்சன் (32). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இன்று காலை கௌதம் ராபின்சன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியுள்ளனர். அப்போது மரத்தின் உச்சியில் இருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வாலிபரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கௌதம் ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து உடனடியாக தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



