மதுரை மே 23,
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம் மதுரை பள்ளிக் கல்வித் துறை, கே.ஆர். எஸ். நியூ லைப் மருத்துவமனை, தனியார் திரையரங்கம் ஒருங்கிணைந்து மருத்துவ முகாமை நடத்தினார்கள். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா. கார்த்திகா தலைமை வகித்து தொடங்கிவைத்தார். கல்வி துறை அலுவலகப் பணியாளர்கள் பயனடைந்தனர். இந்த நிகழ்வில் கே. ஆர். எஸ். நியூ லைப் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜாஸ்மின், மதுரை மாவட்டக் கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில்குமார், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் சரவண முருகன், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



