சென்னை ஜனவரி 14
சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
அறுவடைத் திருநாளாக பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுவது பெருமைமிக்கது.
குறிப்பாக உழவுத்தொழில் செய்யும் உழவர் சமுதாயத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை அமைகிறது.
பொங்கல் திருநாளில் உழவர்கள் உழவுத்தொழிலை வணங்கி கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவது பாராட்டுக்குரியது.
ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாளைத் தான் தை திருநாளாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்
அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் பொங்கல் வைப்பதும் வாழ்த்து பரிமாறுவதும் உதவுவதும் பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும்
மேலும் தை 2 ஆம் நாள் மாட்டுப்பொங்கலாக உழவுக்கு உதவும் மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபட்டு மாட்டு விளையாட்டு நடைபெறுவதும் சிறப்புக்குரியது.
தை 3 ஆம் நாளில் காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று காளைகளுக்கும், காளையர்களுக்கும் வீரத்திருநாளாக அமைகிறது.
குறிப்பாக விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள் நெல், பருப்பு வெல்லம் அரிசி, மஞ்சல் மாவிலை வேப்பிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதையும் வண்ணமயமான கோலங்கள் இட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு மேற்கொண்டு உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடி மற்றவர்களுக்கு உதவிகள் செய்து இன்புற்று வாழ்வதையும் பொங்கல் திருநாள் உணர்த்துகிறது.
உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தமிழர் பெருமையை, பண்பாட்டை நிலைநாட்டுகிறது.
உழவுத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம் வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும்
தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் கோலமிட்டு புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சல் கனிகள் மலர்கள் வைத்து இறைவனை வணங்கி
கொண்டாடி மகிழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.