மார்த்தாண்டம், ஜன. 14 –
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை தந்தார். மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மதுரையில் சமத்துவ நடைபயணத்தை நேற்று முன்தினம் இரவு முடித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிற்பகல் மார்த்தாண்டம் வருகை தந்தார். மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளரும், ஆட்சி மன்ற குழு முன்னாள் உறுப்பினருமான ஜெயராஜ் வீட்டுக்குச் சென்றார். ஜெயராஜ் படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 32 ஆண்டுகள் தமக்கு ஜெயராஜ் துணை நின்றதை நினைவு கூர்ந்தார்
தொடர்ந்து குழித்துறை நகர மதிமுக அலுவலகத்திற்கு சென்று ஜெயராஜ் படத்தை திறந்து வைத்தார் நிர்வாகிகளிடம் நலம் விசாரித்தார். மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார், மாவட்டத் துணை செயலாளர் ரகுகுமார், தக்கலை ஒன்றிய செயலாளர் ஜே பி சிங், குழித்துறை நகர செயலாளர் ஞானதாஸ், அவைத்தலைவர் வக்கீல் ரத்தினகுமார், குழித்துறை நகராட்சி நியமன உறுப்பினர் பா ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



