அஞ்சுகிராமம் பிப்-24
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அஞ்சுகிராமம், மயிலாடி, அழகப்பபுரம் மருங்கூர் சந்திப்புகளில் ஜெயலலிதா படம். அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது ஒன்றிய செயலாளர் எஸ். ஜெஸீம் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மயிலாடியில் மனோகரன் தலைமையிலும், அழகப்பபுரத்தில் மணிகண்டன் தலைமையிலும், மருங்கூரில் சீனிவாசன் தலைமையிலும் அஞ்சு கிராமத்தில் பேரூர் செயலாளர் இராஜபாண்டியன், கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், காமாட்சி, பேரூர் ஜெ. பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகி விஜயன்,சந்தரம்பிள்ள, ஆட்டோ பரமசிவம், ஆட்டோ சுந்தர், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.