கிருஷ்ணகிரி, ஆக. 20 –
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா ராணி தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கர் வரவேற்புரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் வெண்ணிலா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மஞ்சப்பை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நுகர்வோர் சங்க மாநில பொதுசெயலாளர் Dr. சந்திரமோகன் நுகர்வோர் குறித்து மாணவ மாணவிகளுக்கு கருத்துரை வழங்கி பேசும்போது, இன்றைய மாணவ சமுதாயம் நுகர்வோர் குறித்து விழிப்புணர்வு பெறவேண்டும். கடைகளில் சென்று பொருட்கள் வாங்கும் போது உரிய பற்று சீட்டை கட்டாயமாக கேட்டு பெற வேண்டும். மாணவிகள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். நன்கு படித்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.
இறுதியாக பள்ளி மாணவி அனிஷா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராம்பிரசாத், பூர்ணிமா, சசிகலா, தவுலத் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ஜெய்சன், ஜெயப்பிரகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



