நாகர்கோவில் டிச 10
கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செயலாற்றி வருகிறார்கள். Part time job fraud ல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சைபர் கிரைம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
எனவே சைபர்கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மேற்ப்பார்வையில் சைபர் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் சொர்ணராணி தலைமையிலான தனிப்படையினர் வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம், வன்னியூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் பிரதீப்குமார்(30), திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியை சேர்ந்த கோயில்பிள்ளை என்பவரின் மகன் அன்புமணி(28), முருகன் என்பவரின் மகன் கணேஷ்மூர்த்தி(24), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் பாஸ்கர்(21), பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜவஹர்லால் நேரு என்பவரின் மகன் பொன்மாரீஸ்வரன்(27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்டு சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.