By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேனிமாவட்டம்

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Last updated: June 29, 2024 12:30 pm
June 29, 2024
156 Views
Share
SHARE

தேனி

 

      தேனி மாவட்டம், உலக போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, பங்களாமேடு பகுதியில் காவல்துறையின்  சார்பில் சர்வதேச போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி   மற்றும் தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் மாணவர்களிடம் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர்   ஆர்.வி.ஷஜீவனா,  தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆர்.சிவபிரசாத்,  முன்னிலையில் இன்று (26.06.2024) நடைபெற்றது. 

 

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் ஒழித்து போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு  தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

  மது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியானது பங்களாமேடு பகுதியில் தொடங்கி நேருசிலை, பழைய பேருந்து நிலையம், பெரியகுளம்  சாலை வழியாக தேனி-அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில்  வரை சென்று நிறைவு பெற்றது. 

 

தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவிப்பதற்கான புகார் எண் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து, தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

 

 

 

 

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,  

 

தற்போது இளைய சமுதாயத்தினரை நல்வழியில் கொண்டு செல்ல கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

 

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதனால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாக காரணமாகிறது.  இதனை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை மையங்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து 93638 73078 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் தெரிவித்தார்.

 

பின்னர், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சாளர்களின் கருத்துரையும் நடைபெற்றது.

 

இன்று மாலை பங்களாமேடு பகுதியிலிருந்து, நேரு சிலை வழியாக, கான்வன்ட் பள்ளி வரை பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும், கோசங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.

 

இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (கலால்) .ரவிச்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் .பார்த்திபன், கல்லூரி செயலாளர் .தாமோதரன், கல்லூரி முதல்வர் .சீனிவாசன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் (பொ) .விஜயலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அஞ்சலி
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம்

May 27, 2025
57 Views
தருமபுரியில் பாரத வெண்புறா இயக்கம் நாட்டுப்புற கலைஞர்களின் சார்பில் போதை பழக்க வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி
தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account