சூலூர், செப். 27 –
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஆர்.வி.எஸ். ஆயுர்வேதா கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவர் சந்திரமௌலி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமை சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் துவங்கி வைத்தனர். முகாமில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை, சர்க்கரை, ரத்த அழுத்தம், மகப்பேறு போன்றவற்றுக்கு ஆலோசனைகளும் குறைபாடு உள்ளவர்களுக்கு மருந்துகள், மூலிகை தைலங்கள் வழங்கப்பட்டது.



