திண்டுக்கல், ஜூலை 30 –
திண்டுக்கல் வடக்கு ரெங்கநாதபுரம் என்.ஜி.ஓ காலணி பொன்னம்மாள் விறகு அடுப்பில் தண்ணீர் காய வைத்து விட்டு நெருப்பை அணைத்த பின்பும் காற்றினால் தீப்பொறி பறந்து கூரை வீடு சாமான்களுடன் பீரோ, கட்டில், சின்டெக்ஸ், துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் கிச்சன் செட், மளிகை பொருட்கள், தார்பாய், பெட்ஷீட், சேலை, துண்டு, சோப்பு, பேஸ்ட், பிரஸ், பிஸ்கட், ரொட்டி பாக்கெட்டுகள், ரூபாய் 15 ஆயிரம் மதிப்பில் கிழக்கு வட்டாட்சியர் பாண்டியராஜன் தலைமையில் ரெட்கிராஸ் எம்சி உறுப்பினர் சையது அபுதாஹிர், மாவட்ட பொருளாளர் ஆ. சுசீலா மேரி, கிராம நிர்வாக அலுவலர் சைமன், வி.ஓ. உதவியாளர் ராஜ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் சங்கத்தின் ஆயுள் உறுப்பினருமான அ. ஜெயசீலன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆர். பாண்டி, தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் பாத்திமா பீவி, ராஜேஷ்குமார் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.