தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சியில் மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை யும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5- வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் கெவுரகுமார், ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.



