தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஅள்ளி கிராமத்தில் குழந்தைகள் திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் நூல அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய குழந்தைகள் திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



