சென்னை, அக்.22:
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.1,240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை மேலும் சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.225-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
- 22 கேரட் தங்கம் (1 கிராம்): ரூ.13,235
- 22 கேரட் தங்கம் (1 சவரன்): ரூ.1,05,880
- வெள்ளி (1 கிராம்): ரூ.225
- வெள்ளி (1 கிலோ): ரூ.2,25,000



