ஈரோடு, ஜூலை 16 –
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆசனூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரம். குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை. பயோமெட்ரிக் முறை குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். தாளவாடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், மற்றும் வேளாண் இடுபொருட்களின் இருப்பு, விநியோக நிலை, பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசனூர் கிராம நிர்வாக அலுவலத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
சென்டர் தொட்டி பகுதியில் புதிய நீர்த்தேக்க குட்டை அமைக்கப்படவுள்ள இடத்தையும், பார்வையிட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் நில அமைப்பு. மழைநீர் சேகரிப்பு வாய்ப்பு, சுற்றுப்புற பகுதிகளுக்குக் கிடைக்கும் பயன்கள் மற்றும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தாளவாடி பகுதியில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு. களப்பணியாளர்கள் கைப்பேசி செயலி மூலம் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் விவரங்களைத் துல்லியமாக பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு, பயிர் விவரங்கள். நில அளவுகள் மற்றும் இதர தகவல்கள் தவறின்றி பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். ஓங்கல்வாடியில் நூலகத்தில் பராமரிக்கப்படும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள். குடிநீர் உள்ள மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஓங்கல்வாடி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஓங்கல்வாடியில் உள்ள கால்நடை மருந்தகத்தினை ஆய்வு மேற்கொண்டு. கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு தேவையான மருந்துகள் மற்றும் சேவைகள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பன குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தாளவாடி ஊராட்சி ஒன்றியம், ஆசனுார் ஊராட்சி. ஓங்கல்வாடி மற்றும் தாளவாடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, தாளவாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பேருந்தில் பயணம் செய்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
ஈரோடு தாளவாடி ஊராட்சி ஒன்றியம். ஆசனூர் ஊராட்சி. பங்களா தொட்டியில் அமைந்துள்ள சத்துணவு கூடம் சமையலறை கட்டிடத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவு தயாரிக்கப்படுவதையும், சமையலறையின் தூய்மை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஈ-சேவை மையத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ. மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவுப்பொருள்களின் தரம், மின்விளக்கு, சுகாதாரம், சமையலறை பராமரிப்பு, படிப்பறைகள். கண்காணிப்பு கேமரா, விளையாட்டு உபகரணங்கள். முதலுதவி பெட்டி, புகார் பெட்டி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



