வேலூர், டிச. 22 –
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின்படி, அணைக்கட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் வழிகாட்டுதலின் பேரில், டிச 20 அன்று பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெட்டுவானம் பகுதியில், காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக வந்த TN 18 BH 3012 என்ற இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் 18,515 ரூபாய் மதிப்புடைய, 27 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்த எதிரிகள் சுஹேல், வ/28, த/பெ.அமானுல்லா மற்றும் தஹனுன், வ/22, த/பெ.நவாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.



