தமிழ்நாடு, நவ.03.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 3) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் – நரசாப்பூர் இடையே கரையைக் கடந்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மழை காரணமாக கடலூர் மாவட்டம், கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



