களியக்காவிளை, டிச. 17 –
களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினத்தையொட்டி, அன்னராது திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இன்று (17.12.2025) கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், களியக்காவிளை பேரூராட்சி செயல்அலுவலர் சந்திர கலா, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பெனட் ராஜ், பேரூராட்சி உறுப்பினர் ரிப்பாய், கிராம நிர்வாக அலுவலர் ஜீனா ஜாஸ்மின், வருவாய் அலுவலர் தேவிகா, பொதுமக்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



