மார்த்தாண்டம், ஆக. 25 –
மார்த்தாண்டம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் டென்னிஸ் (44). இவர் ஆர் சி தெருவை சேர்ந்த ஜோஸ் (40) என்ற மீனவரின் எடிஎம் கார்டை கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோஸ் பலமுறை கார்டை கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார். நேற்று முன்தினம் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஜோஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டென்னிசை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். டென்னிஸ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்த்தாண்ட போலீசார் ஜோஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


