நாகர்கோவில், டிச. 10 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறுகையில்:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5594 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் 900 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரும் இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (11.12.2025) நடைபெறவுள்ளது என கூறினார்.
நடைபெற்ற கலந்தாய்வில் தேர்தல் தனி வட்டாட்சியர் .வினோத், உசூர் மேலாளர் (பொது)சுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இராமகிருஷ்ணன் (திமுக), ஆனந்த் (தி.மு.க), விஜயகுமார் (பி.ஜே.பி), பன்னீர் செல்வம் (இ.தே.காங்), பிரபு (நா.த.க), ரியாஸ் (வி.சி.க), அகமது உசைன் (சி.பி.ஐ (எம்)), மனோஜ் (என்.பி.பி), அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.



