தேனி, அக்டோபர் 21 –
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியின் அருகே உள்ள பங்களாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து (25), சீமான் என்ற முத்துப்பாண்டி (19), கௌஷிக் பாண்டி (18) ஆகிய மூவரும் மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞர் மதுபோதையில் வெடி வெடித்து ரகலையில் ஈடுபட்டதை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் ஜெயபால் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் மூவரும் சேர்ந்து ஜெயபால் என்பவரை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


