சுசீந்திரம், நவ. 13 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரி செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் பெயரில் இந்து அறநிலையத்துறை சார்பில் தெப்பக்குளத்தை தூர்வார 35 லட்ச ரூபாயும் பாத்திர குளத்தை தூர்வார 15 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்து வேலை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் கேட்டபோது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள சுற்று சுவர் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்களால் கட்டப்பட்டது. இந்த தெப்பக்குளம் தடுப்பு சுவர் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எப்படி கட்டப்பட்டிருந்ததோ அதுபோலவே மீண்டும் சேதம் ஏற்படாத வண்ணம் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
தற்போது சேதம் ஏற்பட்ட இடத்தை மண் நிரப்பிய சாக்கு பைகளால் அடிக்கி சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் மேல் அதிகாரியிடம் பேசி போர்க்கால அடிப்படையில் வேலை நடைபெறும் என சம்மந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார்.



