தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி நகரம் சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி துவக்கி வைத்தார். பொது மக்களிடையே பேசிய அவர் இந்தியாவில் போலியோ ஒழிப்பிற்காக விருது பெற்றவர் அன்புமணி ராமதாஸ் என பெருமிதம் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் 1, 08,343 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக கிராமப் பகுதியில் 964 முகாம்கள், நகரப் பகுதியில் இருவது முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



