சிவகங்கை, ஆக 05 –
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ பொய் சொல்லா மெய் அய்யனார் திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் புரவிகளை வரிசையாக தூக்கிச் சென்று சன்னதி முன் வைத்து வழிபட்டனர் .
இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் மற்றும் வான வேடிக்கைகள் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கொல்லங்குடியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக தேர்ப் பவனி நடைபெற்றது. தேரானது கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் திரளாகச் சென்று வழிபட்டனர். இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக பரதநாட்டியம், சிலம்பாட்டம், காவடியாட்டம் மற்றும் வானவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அர்ச்சகர்கள், கொல்லங்குடி கிராமத்தார்கள் மற்றும் நகர் வர்த்தக சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.