மார்த்தாண்டம், அக். 10 –
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம் காரணமாக பூக்கடை ஊழியர் மீது பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நேரத்தில் பலமாக தாக்கப்பட்டார். ஒரே தாக்குதலில் மயங்கி கீழே விழுந்தார். வாட்சப்பில் வீடியோ வைரலாகிறது.
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் செக்குமூடு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் விஜய் (23). இவர் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். குழித்துறை கல்லு தொட்டியை சேர்ந்த அருளப்பன் மகன் சதீஷ் (42). இவரும் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இரு கடைகளும் அருகருகே உள்ளது.
இவர்களுக்குள் பூ வியாபாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ் விஜயை ஆபாசமாக பேசி பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நேரத்தில் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில் விஜய் படுகாயம் அடைந்து நடு ரோட்டில் மயங்கி விழுந்தார். அப்பொழுது பஸ்கள் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



