By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
விழுப்புரம்

கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

Last updated: July 29, 2025 5:47 pm
July 29, 2025
164 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 29 –

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் செல்லங்குப்பத்தில் கெடார் அரசு மாதிரி பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக் கட்டிடம், மாணவ, மாணவியர் விடுதி கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி வட்டம் செல்லங்குப்பத்தில் கெடார் அரசு மாதிரி பள்ளியில் மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி கட்டடம், மாணவ மற்றும் மாணவியர் விடுதி தலா ரூ.18.57 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் விடுதிகள் கட்டடப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி கட்டடமானது தரை தளத்துடன் இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இதில் 22 வகுப்பறைகள், 1 நூலகம், 1 வரைபட அறை, 2 கணினி அறைகள், 3 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அறை, 1 பல்நோக்கு அரங்கம், 1 தலைமையாசிரியர் அறை மற்றும் 1 அலுவலக அறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மாணவ மற்றும் மாணவியர் தனி விடுதி கட்டடமானது தரை தளத்துடன் ஐந்து தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 416 மாணவர்கள் மற்றும் 416 மாணவியர்கள் தங்கி கல்வி பயில்வதற்கான அறை வசதிகள் உள்ளது. இந்த விடுதியில் தங்கும் அறை, பொதுவான அறை, நூலகம், சமையல் அறை, காப்பாளர் அறை, கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர், வளாகத்தினைச் சுற்றி உயர்மின் கோபுர விளக்குகள், வளாகம் முழுவதும் சிமெண்ட் சாலை, சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாதிரி பள்ளி கட்டடம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டுமானப்பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கெடாரிலிருந்து செல்லங்குப்பம் பள்ளி வளாகம் வரை தார்சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சாலை அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் பாலாஜி, ராஜவேல், உதவி பொறியாளர்கள் மணிமாறன், இம்ரான், பூவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவனேசன், ஜீலியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

குடியரசு தின விழாவை யொட்டி இனிப்பு மற்றும் புத்தாடைகள்

January 29, 2025
43 Views
இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது
வேதா நீட் அகாடமி திறப்பு விழா
மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account