விளாத்திகுளம், பிப்ரவரி 10 -.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள க. குமராபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமால் ரெட்டியார் என்பவரின் மகன் வையணன் (90). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவாரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் க. குமராபுரத்தில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதைப்போல் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் முருகேசன் (36), கட்டிடத் தொழிலாளியான இவர் அதிக குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி வீட்டில் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டி வந்த நபர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் வேஷ்டிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெவ்வேறு பகுதியில் நடைபெற்ற இந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


