தருமபுரி, ஜூன் 11 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கைலாஷ் குமார் மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் பாலக்கோடு ரோட்டில் உள்ள மளிகை மற்றும் பீடா கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை அடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கடை உரிமையாளருக்கு ரூ. 50,000 அபராத விதித்து கடை முப்பது நாட்களுக்கு செயல்பட தடை விதித்தனர்.


