தேனி, மார்ச் 21 –
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் தெருவில் ஓடி வருகிறது. மேலும், அந்தச் சாக்கடை அருகிலேயே குடிநீர் குழாய் இருப்பதால், குடிநீரில் கலப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அதே இடத்தில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடை அடைப்பை சரிசெய்யவும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



