By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி

Last updated: February 16, 2026 7:28 pm
February 16, 2026
66 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 16 –

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்க ஆர்.எஸ். பார்த்தசாரதிக்கு வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கைகள்

தமிழக தேர்தல் களத்தை பொருத்தவரை வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை என்பது எப்போதுமே மிக முக்கியம் வாய்ந்தவையாக திகழும். அதன் அடிப்படையில் ,தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் திமுகவும் அதிமுகவும் அதிதிவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த தேர்தல் அறிக்கையின் போது திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிதளவில் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த திட்டம் திமுக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்றே கூறலாம். இத்திட்டத்ததை திமுக அரசு கனகச்சிதமாக நிறைவேற்றி வரும் நிலையில், இத்திட்டத்தை சமநிலைபடுத்த அதிமுக தலைமை மகளிருக்கு ரு.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல் கட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. தற்போது வரை இரண்டு கட்டமாக அதிமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியுள்ளது. இதற்கு ஈடுகொடுத்து வாக்காளர்களை தங்கள் வசபடுத்த திமுக தலைமை தேர்தலை அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டணி கணக்குகள்

தேர்தலில் இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கூட்டணி கணக்குகள் இடம் பெறுகின்றன. வலுவான கூட்டணியாக இருந்து வரும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியும் அமைந்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை 50-50 என்ற சூழலில் தான் இருகட்சிகளின் கூட்டணியும் அமைந்துள்ளது.

கரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வேட்பாளர் தேர்வில் மும்முரம்…..

தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கை, கூட்டணி கணக்குகள் எனவுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வு மிக முக்கிய அம்சங்களாக அரசியல் கட்சிகளுக்கு இடம் பெறுகின்றன. கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றில் வருகிற தேர்தலில் திமுக வும் அதிமுக வும் தராசு எடையில் சமபலத்தில் இருந்து வரும் நிலையில் வேட்பாளர் தேர்வு கடும் சவாலான விஷயமாக உள்ளது. 234 தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரண்டு கட்சிளுக்குமே தங்கள் கட்சிகளுக்குள்ளேயே கோஷ்டி பூசல் வலுவாக உள்ளது.

கரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வேட்பாளர் தேர்வு இருந்து வரும் நிலையில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக தீவிரம் காட்டி வரும் பட்டியலில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுவந்தன.

ஆனால் இவர்கள் அனைவரும் திரைக்கு முன்னால் பேசப்பட்டு வந்தவர்கள் மட்டுமே, இவர்களில் யாரை வேட்பாளராக களம் இறங்கினாலும் நண்டு கதையாகிவிடும் என்பதை உணர்ந்த திமுக தலைமை,கோஷ்டி பூசலில் சிக்கிகொள்ளாத மற்றும் சொந்த செல்வாக்கு அதிகமுள்ளவர்களை வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்து அதனடிப்படையில் வேட்பாளர் தேர்வு பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

இதற்காக தான் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேரடியாக குமரி மாவட்டம் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் தான் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தளவாய்சுந்தரத்திற்க்கு இத்தொகுதியில் நல்ல பெயரும் உள்ளது.

அதிமுக -பா.ஜ., கூட்டணி என்பதால் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெல்வது என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்து எடுப்பதற்கு சமமான விஷயம். எனவே, திமுக தலைமை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

ஆர்.எஸ்.பார்த்தசாரதி

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி. அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த இவர் முகிலன்குடியிருப்பு ஊர் தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.

ஆர்.எஸ்.பார்த்தசாரதிக்கு சமூகத்தில் நற்பெயர் இருந்து வருகிறது. துறைமுக எதிர்ப்பு குழு போராட்ட விஷயத்தில் இவர் மிக முக்கிய பங்காற்றியவர் என்பதால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், மணக்குடி, கீழமணக்குடி, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட மீனவ சமுதாய மக்கள் நம்பிக்கையும் பெற்றுள்ளார்.

ஆகவே இவருக்கு வாய்ப்பு வழங்கினால் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மீனவ சமூதாய வாக்குகளை பெறுவது எளிது எனவும், கோஷ்டி பூசலில் இருந்து திமுக தன்னை தற்காத்து கொள்ளலாம் எனவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாமிதோப்பு தலைமைபதி குரு ஜனா யுகேந்த்

அதற்கு அடுத்தபடியாக சாமிதோப்பு தலைமைபதி குருமார்களில் ஒருவரான வக்கீல் ஜனா யுகேந்தினை வேட்பாளராக களம் இறங்கினாலும் இதே சூழல் ஏற்பட்டு, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.,வின் வேகத்தை கட்டுபடுத்த முடியும் என திமுக தலைமை நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சாமிதோப்பு தலைமை பதி குரு ஒருவரை வேட்பாளராக களம் இறக்குவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகவும் தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் அய்யாவழி மக்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் திமுக தலைமை வேட்பாளர் தேர்வில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்ட காவல் துறையினால் மீட்கப்பட்ட கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு பெரிய சேமூர் பகுதியில்8 இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

May 26, 2024
133 Views
இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய தவெக தண்ணீர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account