மார்த்தாண்டம், நவ. 19 –
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குழித்துறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவி சங்கர், மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், ரமேஷ் குமார், ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் டூவர்ட், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர். தம்பி விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி கடைப்பிடிக்கப்பட்டது.



