கன்னியாகுமரி, செப். 15 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த பிறந்த நாள் மற்றும் கழக முப்பெரும் விழாவையொட்டி கழக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் முருகன் குன்றம் அருகே 70 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு 70- அடி உயரக் கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்பு மேடையில் பேசிய அவர்: கொடி மரத்தில் கொடி ஏற்றக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முதல் முதலாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வாசலில் நம் இயக்கத்தின் கொடியை ஏற்றினேன். அதன் பிறகு இன்று பட்டொளி வீசி பறக்கக்கூடிய இவ்வளவு பெரிய அழகான திராவிட முன்னேற்றக் கழக கொடியை எங்கு பார்த்தாலும் எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் மனதிலே ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஒரு துள்ளல் ஏற்படும் அதனை மனதில் ஏந்திக்கொண்டு தான் இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.
பத்தொழில் வீசி பறக்கக்கூடிய வகையிலே மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி தமிழ்நாட்டில் பட்டொளி வீசி பறக்கும் யாரும் வீழ்த்த முடியாத கொடி திராவிட முன்னேற்றக் கழக கொடி என்ற பெருமை இங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது. யார் போட்டிக்கு வந்தாலும் யாராக இருந்தாலும் தொடர்ந்து வெற்றி பெற்று இந்த நாட்டை இந்த மண்ணை, மக்களை காப்பாற்றக்கூடிய அந்தக் கடமை நமக்கு இருக்கிறது என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


