ஈரோடு, அக். 1 –
ஈரோட்டில் உலக இருதய தினத்தை முன்னிட்டு கேர் 24 மருத்துமனை, இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன், நந்தா நர்சிங் கல்லூரி, செங்குந்தர் நர்சிங் கல்லூரி, செல்வா சாரிடபுள் ட்ரஸ்ட் ஆகியோர் இணைந்து ‘இதயத்திற்காக நடப்போம் இதயத்தை காப்போம்’ என்கின்ற நடைபயண விழிப்புணர்வு பேரணியை கேர் 24 மருத்துவமனை சேர்மன் டாக்டர் கருப்பண்ணன் துவங்கி வைத்தார்.
இந்த பேரணியில் மாணவ மாணவிகள் இதயத்தை காப்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி காளிங்கராயன் இல்லத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரை சென்றனர். இந்த பேரணியில் டாக்டர் அரவிந்த் டாக்டர் பாலு டாக்டர் விஜய் பாரதி உட்பட முக்கிய நிர்வாகிகள், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்



