By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
கிருஷ்ணகிரிமாவட்டம்

உலக மக்கள் தொகை தின உறுதிமொழி

Last updated: July 12, 2024 5:28 pm
July 12, 2024
227 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி- ஜூலை-12-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள் அவர்கள் தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள்  எடுத்துக்கொண்டனர்.

தற்போது உலகத்திலேயே மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அறிவித்து, அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக மக்கள் தொகை தினம் “தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில், திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.

மக்கள் தொகை தின உறுதிமொழியானது:

நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதிய பிறப்பு இடைவெளி முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.

சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி

அளிக்கிறேன்.குடும்ப நலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஜீவா நர்ஸிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.தர்மர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் மரு.பாரதி, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், பள்ளி மற்றும் நர்ஸிங் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
2ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை

January 10, 2025
49 Views
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account