By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு

Last updated: September 16, 2025 5:27 pm
September 16, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 16 –

நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் நடைபெறும் ஒப்பந்த பணிகள் மாநகராட்சி ஒப்பந்த படிவத்தில் உள்ளது போல் நடைபெறாமல் ஒப்பந்ததாரர்களின் மனம் போல் நடைபெறுவதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பணியின் தரத்தையும், பணியையும் ஆய்வு செய்யாததால் பல லட்ச ரூபாய் இழப்பு மற்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் மாநகராட்சியின் 23-வது வார்டுக்கு உட்பட்ட டதி பெண்கள் மேல்நிலை பள்ளி முதல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் உள்ள ரவுண்டணா வரை இருபுறமும் மழை நீர் வடிகால் அமைத்து நடைபாதை அமைக்க ரூ. 40,00,000 (நாற்பது லட்சம் ) மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு 11-04-2025ல் ஆணையர் கையொப்பத்துடன் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன் நகல் உதவி பொறியாளர், மாநகர பொறியர் மற்றும் மாநகர நகர் நல அலுவலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பணி 03-09-2025 அன்று மாநகராட்சி ஆணையர் உட்பட மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் மேயரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணியானது வேலை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது படி வேலை நடைபெறவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தை ஒட்டிய சாலையில் ஏற்கெனவே இருந்த மழை நீர் ஓடையை சீரமைக்காமல் மண் போட்டு மூடி அதன் மீது சிமெண்ட் கலவை (Concrete) கொண்டு மூடியுள்ளார்கள். இதனால் மழை காலங்களில் சாலையில் வழிந்தோடும் மழைநீர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வரும் மழை நீர், மழைநீர் ஓடையில் செல்ல வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் மேடான பகுதியில் இருந்து வரும் மழைநீர் எழிதில் மழைநீர் வடிகாலில் வழிய அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் சரிவாக அமைக்கப்பட வேண்டும். மாநகராட்சி முறையாக திட்டமிட்டு செயல்படுத்தபாததாலும், செயல்படுத்தும் பணியை சம்மந்தப்பட்ட பொறியாளர்கள் முறையாக கண்காணிக்காததாலும் பெருமளவில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தமட்டில் தரமில்லாத பணிகளை தொடர்ந்து செய்து மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இதனால் தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தை ஒட்டியே வேலை உத்தவு படி வேலை செய்யாதது குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் தெரிவித்தும், பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு துணையாக இருக்கும் மாநகராட்சி நிர்வாக பணி ஆய்வாளர், உதவி பொறியாளர், மாநகர பொறியர் மற்றும் மாநகர நகர் நல அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வேலை உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை போன்று மழை நீர் வடிகாலில் மண் கொண்டு மூடி போடப்பட்டுள்ள சிமெண்ட் கலவையை (Concrete) உடனடியாக அகற்றிவிட்டு மழைநீர் வடிகாலை, மழைநீர் செல்ல தடையின்றி சீரமைத்து அதன்பிறகு நடைபாதை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
ஆசாரிப்பள்ளம் பகுதியில் புகையிலை விற்பனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை
ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆஞ்சநேயர் சுவாமி ஆடி அமவாசை

August 5, 2024
142 Views
ஆட்சியர் கார்த்திகேயனிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள்
விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி
ஊத்தங்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்‌
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account