By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்

Last updated: March 7, 2026 9:03 pm
March 7, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 7 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 2வது சிவாலயமான ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே திக்குறிச்சி பயணம் பால பணிகள் நடைபெற்ற போது ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தால் கோயில் சுற்று சுவரோடு சேர்த்து இருந்த மண் திட்டு ஆற்று வெள்ள பெருக்கில் இழுத்து சென்றது. இதனால் கோயில் சுற்று சுவர் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் சுவர் பாதுகாப்பிற்காக பெரிய பாரங்கற்களை கொட்டினர். அந்த கற்களையும் ஆற்று வெள்ள பெருக்கு இழுத்து சென்றது. இதனால் இந்த பகுதியில் கோயில் சுவர் மற்றும் கோயில் பாதுகாப்பிற்காக பக்க சுவர் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் அன்றைய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பொது பணி துறை க்கு ஒதுக்கீடு செய்தனர். ஆனால் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்த காரணத்தால் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட அமைப்பினர் பல கட்ட போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பக்கச்சுவர் அமைக்க தாமிரபரணி ஆற்றில் தடுப்பு சுவர் (வண்டு) அமைக்க மண் போட்டு நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக குழித்துறை சப்பாத்து பாலத்தில் ஆற்று தண்ணீரும் திறந்து விடப்பட்டது. ஆனால் கடந்த 2 தினங்களாக கனிம வளம் மண் தட்டுபாடு என்று கூறி பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் பக்கச்சுவர் அமைக்க தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது போன்று இந்த பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணமாக பாகோடு பேருராட்சி, வெள்ளாங்கோடு ஊராட்சி மற்றும் குழித்துறை நகராட்சி பகுதிகளுக்கு சொந்தமான தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை நீர் கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்படி பல சிரமங்களுக்கு உள்ளாகி நடந்து வரும் இந்த பணிகளை மண் தட்டுப்பாடை காட்டி கிடப்பில் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலம் துவங்கும் முன் இந்த பணிகள் முடிவடைந்தால் மட்டுமே பக்கச்சுவர் அமைக்கும் பணிகளை முழுமையடைய செய்ய முடியும் என்ற இலக்கோடு கோயில் சுற்று சுவர் இடிந்து கோயிலை பாதிக்கும் முன் பணிகளை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு
முசிறி: பங்காரு அடிகளார் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது
குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்
காங். சிறுபான்மை பொதுச் செயலாளர முகம்மது சலீம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

August 6, 2025
205 Views
மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி
துறையூர் அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
கலை சங்கம நிகழ்ச்சி தேவாரம் சிவதாண்டவம்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account