ஈரோடு, ஜூன் 11 –
கோபி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதை மாணவ மாணவிகள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறும்போது: மாணவ, மாணவியர்கள் எவ்வித தவறான பழக்கத்திற்கும் ஆளாகாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. நம் வாழ்க்கை முக்கியம். நமது பெற்றோர்கள் முக்கியம் என நீங்கள் அனைவரும் நினைத்து கல்வி கற்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கையில், முன்னேற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது.



