திருப்புவனம், ஆகஸ்ட் 18 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலராங்கியம் ஊராட்சி, சம்பக்குளம் கிராமத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் சபையின் முன் கூடியிருந்த பொது மக்கள் மத்தியில்
ஊராட்சியின் ஏப்ரல் 1 முதல் ஜூலை 2025 வரையான செலவினங்கள் குறித்து முறையே எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சபையில் 22 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்வின் போது வருவாய்துறை மற்றும் கல்விதுறை, சுகாதார துறை, பொது விநியோக திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் தண்டிலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.



