நாகர்கோவில், மார்ச் 19 –
கன்னியாகுமரி மாவட்டம் எஸ்பி ஸ்டாலின் உத்தரவு படி தக்கலை மது விலக்கு டிஎஸ்பி ராஜா, ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் களியாக்காவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
அவரது பேக்கை பரிசோதனை செய்த போது சுமார் 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
இதனை அடுத்து வடசேரி பகுதியில் சேர்ந்த ஜெரின் ஜோஸ் (31) இவருடன் தொடர்பில் உள்ள மகேஷ் (32), பிரவீன் (34) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்கும் நிலையில் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



